வேர்க்கடலை பர்பி
Peanut Burfi is a delicious Indian recipe served as a Dessert.Peanut burfi is an easy and healthy kids friendly snack with peanuts and jaggery.
Servings6 people
Prep Time10 minutes
Cook Time10 minutes
Passive Time30
Ingredients
- நிலக்கடலை பருப்பு
- 1 கப் வெல்லம்
- 1/2 கப் தண்ணீர்
- 1 டேபிள் ஸ்பூன் நெய்
Instructions
- அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் நிலக்கடலையை சேர்க்க வேண்டும்.
- நிலக்கடலை பிரவுன் கலராக மாறி அதில் கருப்பு புள்ளிகள் தோன்றும் வரை வறுக்க வேண்டும்
- அதை ஒரு தட்டிற்கு மாற்றி 5 நிமிடங்கள் குளிர வைக்கவும்.
- உங்கள் உள்ளங்கைகளால் நிலக்கடலையை தேய்த்தால் அதிலுள்ள தோல்கள் உரிந்து விடும்.
- இப்பொழுது கொஞ்சம் ஊதி விட்டால் தோல் தனியாக பிரிந்து விடும். நிலக்கடலையை தனியாக எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
- இப்பொழுது தோலுரித்த நிலக்கடலையை ஒரு கிண்ணத்தை கொண்டு நசுக்கி லேசாக உடைத்து கொள்ளுங்கள்.
- ஒரு தட்டை எடுத்து அதில் 1/2 டேபிள் ஸ்பூன் நெய் தடவவும்
- அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் வெல்லத்தை சேர்க்க வேண்டும்
- உடனடியாக 1/4 கப் தண்ணீர் சேர்க்க வேண்டும்.
- வெல்லம் நன்றாக கரையும் வரை நன்றாக கிளறி விடவும். மிதமான தீயில் கொதிக்க விடவும்.
- வெல்லப் பாகுவின் சரியான பதத்தை கண்டறிய பாகுவில் சில துளிகள் எடுத்து 1/4 கப் தண்ணீரில் விடவும்.
- அதில் வெல்லப் பாகு பரவவில்லை என்றால் வெல்லப் பாகு சரியான பதத்தில் இருக்கிறது என்பதை உறுதிபடுத்தி விடலாம்.
- அதனுடன் நிலக்கடலையை போட்டு நன்றாக கிளறவும்.
- இந்த கலவையை நெய் தடவிய தட்டில் கொட்டவும்
- நன்றாக பரப்பி விட்டு மிதமான சூடு வரும் வரை 5 நிமிடங்கள் ஆற வைக்க வேண்டும்.
- அதே நேரத்தில் கத்தியில் நெய் தடவிக் கொள்ளவும்.
- இப்பொழுது கலவையை செங்குத்தாக வெட்டவும்.
- பிறகு கிடைமட்டமாக வெட்டி சதுர வடிவ துண்டுகளை பெறலாம்.
- நன்றாக ஆறியதும் கவனமாக எடுத்து மிட்டாய்களை பரிமாறவும்.
The post Peanut Burfi Recipe in Tamil appeared first on HungryForever Food Blog.